கழிவுநீர் கால்வாய் அமைக்க கோரிக்கை
பந்தலூர், ஜூலை 9: பந்தலூர் அருகே தேவாலா பஜார் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பந்தலூர் அருகே நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட தேவாலா பஜாரில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள், குடியிருப்புகள் மற்றும் அரசு, தனியார் பள்ளிகள் இயங்கி வருகிறது. இந்நிலையில், தேவாலா பஜார் கரியசோலை சாலை பகுதியில் இருந்து ஆர்டிஐ சாலை வரை கழிவுநீர் கால்வாய் முறையாக இல்லாததால் கடைகள் மற்றும் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்வதற்கு வழியில்லாமல் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் ஏற்பட்டு கொசு உற்பத்தயாகி பாதிப்புகள் ஏற்படுகின்றது. இதனால் பொதுமக்கள் பஜார் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.