செத்தக்கொல்லியில் அடிப்படை வசதி கேட்டு அதிகாரியிடம் மனு
பந்தலூர், ஜூலை 25: பந்தலூர் அருகே நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்ட தேவாலா செத்தகொல்லி பகுதி மக்கள் அடிப்படை வசதிகளை செய்து தர கோரி நகராட்சி அதிகாரியிடம் மனு கொடுத்தனர் நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ளது நெல்லியாளம். இங்குள்ள நகராட்சி 12-ம் வார்டு செத்தக்கொல்லி பகுதியில் ரூ. 35 லட்சத்தில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால் 3 ஆண்டுக்கும் மேலாகியும் இத்திட்டம் தற்போது வரை செயல்படுத்தவில்லை.
இதனால் குடிநீர் வசயின்றி பொதுமக்கள் கடும் அவதிபடுகிறார்கள். 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் கடந்த பல ஆண்டுகளாக கிராமப் பகுதியில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர கோரி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியுள்ளனர். எனவே இந்த திட்டத்தை நிறைவேற்றக்கோரியும், யானை உள்ளிட்ட வனவிலங்குள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் தெருவிளக்கு போன்று அடிப்படை வசதி கேட்டு நகராட்சி பொறியாளர் விஜயராஜிடம் மனு அளித்தனர்.