ஒய்எம்சிஏ பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ஊட்டி, ஜூலை 31: ஊட்டி ஒய்எம்சிஏ., மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. செயலாளர் மேக்ஸ் வில்லியர்ட் ஜெயபிரகாஷ் வரவேற்றார். ஒய்எம்சிஏ., தெற்கு மண்டல தலைவர் மற்றும் மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் முழுநேர உறுப்பினர் வில்ஸ்ரோ டாஸ்பின் தலைமை வகித்து கண்காட்சியை துவங்கி வைத்து பார்வையிட்டார். இக்கண்காட்சியில் பள்ளி மாணவர்கள் அன்றாட வாழ்வில் அறிவியல், இயற்கை வளங்களை பாதுகாப்போம், அறிவியலின் முன்னேற்றம் போன்ற தலைப்புகளில் பல்வேறு தலைப்புகளில் தங்களின் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.
மேலும் மாறுவேட போட்டி, ஆடல், பாடல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. பள்ளி மாணவர்கள் ஐயான், மிருதுள் ஆகியோர் அறிவியல் துறை குறித்து பேசினர். சிறந்த அறிவியல் படைப்புகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் தெற்கு மண்டல செயலாளர் ஜான் சுதர்ஷன், துணை தலைவர் சார்லஸ், மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி தாளாளர் லேம்பர்ட் ஈஸ்டர்பால்ராஜ், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கண்காட்சியை கண்டு மகிழ்ந்தனர்.