மஞ்சூரில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை தீவிரம்
மஞ்சூர், ஜூலை 30: தமிழ்நாடு முழுவதும் அனைத்து பகுதிகளிலும் வீடு, வீடாக சென்று திமுக ஆட்சியின் சாதனைகள் மற்றும் திட்டங்களை மக்கள் மத்தியில் எடுத்து கூறி ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் உறுப்பினர் சேர்க்கை பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதன்படி மஞ்சூர் பகுதியில் திமுக இளைஞரணி சார்பில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரும் மாவட்ட திட்டக்குழு உறுப்பினருமான பாபு தலைமை தாங்கினார். திமுக நிர்வாகிகள் ராஜூ, முஸ்தபா, நாராயணன், ஈஸ்வரன், பிரபு, வினோத், சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டார்கள். தொடர்ந்து வீடு, வீடாக சென்று பொதுமக்கள் மத்தியில் திமுக திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள், மற்றும் மக்கள் நலத்திட்டங்களை விரிவாக எடுத்து கூறி உறுப்பினர் சேர்க்கையில் தீவிரமாக ஈடுபட்டார்கள்.