நெல்லியாம்பதியில் நோய்கள் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை
பாலக்காடு, ஆக.2: நெல்லியாம்பதி கிராமப்பஞ்சாயத்தில் நோய்கள் பரவாமல் தடுக்க அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குளோரின் தெளிப்பு பணி நடந்தது. நெல்லியாம்பதி கிராமப்பஞ்சாயத்துக்கு உட்பட்ட பாடகிரி, தோட்டேக்காடு, ராஜாக்காடு, புல்லாலா, ஓரியண்டில், லில்லி, நூரடி, போத்துப்பாறை, மீரப்லோரா, கூனம்பாலம், ஏலம் ஸ்டோர், தேனிபாடி, கைக்காட்டி, ஆரஞ்சு பண்ணை, புலயம்பாறை, ஊத்துக்குழி, சீதார்குன்று, கோட்டயங்காடு மற்றும் சந்திரமலை ஆகிய இடங்களில் அமைந்துள்ள குடிநீர் கிணறுகளிலும், குடிநீர் தேக்கங்களிலும், தொட்டிகளிலும் குளோரின் தெளிக்கும் பணி நடைபெற்றது.
இதில், சுகாதாரத்துறை இன்ஸ்பெக்டர் ஆரோக்கியம் ஜோய்சண், ஜூனியர் ஹெல்த் இன்ஸ்பெக்டர் அப்ஷல், சரண்ராம், மணிகண்டன், பீரதீப் ஆகியோர் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கை மூலம் மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய நோய்களை தடுக்க முடியும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.