அட்டப்பாடியில் மக்கள் குறைதீர் கூட்டம்
பாலக்காடு, ஆக.2: அட்டப்பாடியில் பாலக்காடு மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் பிரியங்கா தலைமை தாங்கி நடைபெற்ற மக்கள் குறைத்தீர்ப்பு கூட்டத்தில் 139 புகார் மனுக்களை பெற்றனர். இதில், 100 புகார் மனுக்களுக்கு மாவட்ட கலெக்டர் நேரடியாக தீர்வு வழங்கினார். 39 புகார் மனுக்களை ஆய்வு மேற்கொண்டு தீர்வுகள் காணுமாறு உத்தவிட்டார்.
அட்டப்பாடி வட்டலங்கி கூட்டுறவு சேவா கலையரங்கில் நடந்த மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பிளாக் பஞ்சாயத்துத் தலைவர் மருதி முருகன், அகழி கிராமப்பஞ்சாயத்து தலைவர் ராமமூர்த்தி, புதூர் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஜோதி அனில்குமார், சப் கலெக்டர் ரவிமீணா என பலர் கலந்து கொண்டனர்.