2026 சட்டமன்ற தேர்தலில் நீலகிரியில் 3 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற பாடுபட தீர்மானம்: மாவட்ட செயற்குழு கூட்டத்தில் முடிவு
ஊட்டி, ஜூலை 29: 2026 சட்டமன்ற தேர்தலில் நீலகிரியில் மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற பாடுபடுவது என மாவட்ட செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நீலகிரி மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட அலுவலகமான ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது. மாவட்ட அவை தலைவர் போஜன் தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் கே.எம்.ராஜூ வரவேற்றார். உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் முபாரக், தேர்தல் பணி செயலாளர், அரசு கொறடா ராமசந்திரன், சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள் பரமேஸ்குமார், தென்றல் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட பொறுப்பு அமைச்சர், தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசினார். கூட்டத்தில் திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்த படி “ஓரணியில் தமிழ்நாடு” எனும் உறுப்பினர் சேர்ப்பு பணிகள் நீலகிரி மாவட்டத்தில் நடந்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 690 வாக்குச் சாவடிகளுக்கும் தலைமை நிர்ணயித்துள்ள இலக்கினை வரும் 31.7.2025-க்குள் நூறு சதவீதம் நடத்தி முடிப்பது எனவும், நீலகிரி மாவட்டத்தில் முழுமையாக செயல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது. தமிழகத்தில் 2021 நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மகத்தான் வெற்றி பெற்று திராவிட மாடல் அரசு அமைந்து சிறப்பான மக்கள் நல திட்டங்களால் நாட்டு மக்கள் பெரிதும் பயன்பெற்று வருகிறார்கள். வரும் 2026 சட்டமன்ற தேர்தலிலும் தமிழ்நாட்டில் “வெல்வோம் 200” “படைப்போம் வரலாறு” என்கிற இலக்கினை அடைந்திடும் வகையில் சிறப்புடன் செயல்பட்டு, தமிழகத்தில் மீண்டும் திமுக. அரசு அமைந்மதிட ஏதுவாக நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி, கூடலூர், குன்னூர் சட்டமன்ற தொகுதிகளில் மகத்தான வெற்றி பெற ஒவ்வொரு திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பணியாற்றுவது என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாவட்ட துணைச் செயலாளர்கள் ரவிகுமார், தமிழ்செல்வன், லட்சுமி, மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமைச்செயற்குழு உறுப்பினர்கள் திராவிடமணி, செந்தில் ரங்கராஜ், தம்பி இஸ்மாயில், சுனிதா நேரு, மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் வாசிம்ராஜா, நகர செயலாளர்கள் ஜார்ஜ், ராமசாமி, சேகரன், ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் பரமசிவன், லாரன்ஸ், நெல்லை கண்ணன், காமராஜ், தொரை, பிரேம்குமார், பீமன், சிவானந்தராஜா, ஜெகதீசன், உத்தமன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் கருப்பையா, சதக்கத்துல்லா, லியாகத் அலி, வீரபத்திரன், பில்லன், செல்வம், உதயதேவன், ராஜேந்திரன், அமிர்தலிங்கம், வாணீஸ்வரி, மகேஷ், காளிதாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் நாசர் அலி நன்றி கூறினார்.