குன்னூர் நகராட்சியில் 3500க்கும் அதிகமானோர் பெயர்கள் நீக்க வாய்ப்பு
Advertisement
குன்னூர், டிச.6: தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக கடந்த நவம்பர் 4ம் தேதி முதல் வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்கள் வீடுவீடாக வழங்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு வீட்டிலும் கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த படிவங்களை நிரப்பி கொடுக்க டிசம்பர் 4ம் தேதி கடைசி நாள் என்று முதலில் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது இப்பணிக்கால அவகாசம் வரும் 11ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
Advertisement