நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் கோத்தகிரியில் 1000க்கும் மேற்பட்ட மக்கள் பயன்
கோத்தகிரி, ஆக.3: ஏழை, எளிய மக்கள் தரமான மருத்துவ சிகிச்சை பெற்றிட, அவர்களுக்குள் உள்ள நோயை கண்டறிய தமிழ்நாடு அரசு சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் புனித அந்தோணியார் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு கொறடா ராமச்சந்திரன் குத்துவிளக்கு ஏற்றி முகாமினை தொடக்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், மாவட்ட கழக பொறுப்பாளர் ராஜு ஆகியோர் முகாமினை நேரில் பார்வையிட்டனர். இந்த முகாமில் பழங்குடியினர்கள், தோட்டத் தொழிலாளர்கள், தேயிலை விவசாயிகள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு 16 விதமான அதிநவீன உயர் சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.