பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்த நாள் விழா
பள்ளிபாளையம், ஜூலை 26: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸின் 87வது பிறந்தநாள் விழா நேற்று பள்ளிபாளையத்தில் கொண்டாடப்பட்டது. நாமக்கல் மேற்கு மாவட்ட பாமக செயலாளர் உமாசங்கர், நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். அக்ரஹாரம் காசிவிஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் காலை உணவு வழங்கினர்.
பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளுக்கு பால், ரொட்டிகள் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டது. பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் முருகேசன், மாநில செயற்குழு உறுப்பினர் பழனியப்பன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சரோஜா, மாவட்ட கலை இலக்கிய அணி செயலாளர் முருகேசன், மாவட்ட துணைத்தலைவர் சேகர், ஒன்றிய தலைவர்கள் முருகன், நாகராஜ், ஒன்றிய செயலாளர் செல்வா, நகர செயலாளர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.