ஓரணியில் தமிழ்நாடு விழிப்புணர்வு பிரசாரம்
திருச்செங்கோடு, ஜூலை 31: திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்லூரிகள் முன்பு மாணவ, மாணவிகளிடம் ஓரணியில் தமிழ்நாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்தி, விண்ணப்பங்களையும், துண்டு பிரசுரங்களையும் வழங்கினார். நாமக்கல் மேற்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் வட்டூர் தங்கவேல், தாமரைச்செல்வன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் ஐயப்பன் என்கிற பெருமாள், தீபன், நானா நானி கார்த்தி, ராகேஷ் கண்ணா, தங்கமணி, லாவண்யா மற்றும் ரகு சத்தியசீலன் உள்ளிட்ட ஒன்றிய மாணவர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாணவர்கள் திமுக நிர்வாகிகள் கொடுத்த துண்டு பிரசுரங்களையும் விண்ணப்பங்களையும் ஆர்வத்துடன் பெற்றுக் கொண்டனர்.
Advertisement
Advertisement