ராசிபுரம் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
ராசிபுரம், ஜூலை 30: ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ராசிபுரம்- சேலம் சாலை அருகே ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளது. இங்கு பல்வேறு வழக்கறிஞர்கள் வழக்கிற்காக நேற்று ஆஜராக வந்திருந்தனர். இந்நிலையில், திருப்பூரில் வழக்கறிஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று ஒருநாள் அடையாள நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தினால், நீதிமன்ற வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.