ரூ.5.10 லட்சத்திற்கு கொப்பரை விற்பனை
01:25 AM Aug 02, 2025 IST
திருச்செங்கோடு, ஆக.2: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், திருச்செங்கோடு தலைமையகத்தில் நேற்று நடந்த ஏலத்தில், 66 மூட்டை கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்தனர். முதல் தரம் கிலோ ரூ.206 முதல் ரூ.239 வரையிலும், 2ம் தரம் ரூ.150.10 முதல் ரூ.185.75 வரையிலும் விற்பனையானது. ஆகமொத்தம் ரூ.5.10 லட்சத்திற்கு கொப்பரை விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.