திருநங்கைகளுக்கு மாற்று இடம் ஒதுக்க வேண்டும்
நாமக்கல், ஜூலை 29: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், திருச்செங்கோடு தாலுகா வரகூராம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள், கலெக்டர் துர்கா மூர்த்தியிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: திருச்செங்கோடு தாலுகா, கூட்டப்பள்ளி குடித்தெரு மற்றும் அருந்ததியர் காலனியில், 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அனைவரும் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் செய்து வருகின்றனர். கூட்டப்பள்ளி குடித்தெருவில் இருந்து தேவனாங்குறிச்சி செல்லும் வழியில், புறம்போக்கு இடத்தில் 2 குட்டைகள் உள்ளன. இதன் மூலம் கால்நடைகள் பயன்பெற்று வருகின்றன. இவை விவசாயத்திற்கும் பயன் அளிக்கிறது. இந்த இடத்தில் திருநங்கைகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்ய அரசு அலுவலர்கள் ஆய்வு மெற்கொண்டனர். அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். இதற்கிடையில் தட்டாம்பாளையத்தில் திருநங்கைகளுக்காக தமிழக அரசு, கடந்த 2013ம் ஆண்டு நிலம் ஒதுக்கி வீடும் கட்டி கொடுத்து உள்ளது. அங்கு, திருநங்கைகள் யாரும் வசிப்பதாக தெரியவில்லை. ஆனால் திருநங்கைகளுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை வருவாய் துறையினர் மறைத்து உள்ளனர். எனவே, கால்நடைகள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, திருநங்கைகளுக்கு வேறு இடத்தில் மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளன/