எருமப்பட்டி பிஎஸ்என்எல் ஆபீசில் 36 பேட்டரி திருட்டு
சேந்தமங்கலம், ஜூலை 29: எருமப்பட்டி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் 36 பேட்டரிகள் திருட்டு ேபானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எருமப்பட்டி பிஎஸ்என்எல் அலுவலகம், கடந்த சில மாதங்களாக மூடப்பட்டுள்ளது. ஆனால் இங்குள்ள செல்போன் டவர் செயல்பட்டு வருகிறது. அதற்காக புதிய பேட்டரிகளை பொருத்தி விட்டு, பழைய 36 பேட்டரிகள் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று மாதாந்திர பராமரிப்பு பணிக்காக பிஎஸ்என்எல் அலுவலர்கள் வந்துள்ளனர். அப்போது பழைய 36 பேட்டரிகளும் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த பல்வேறு பொருட்கள் சிதறி கிடந்தது. மர்ம நபர்கள் உள்ளே சென்று திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து எருமப்பட்டி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். திருட்டு போன பழைய பேட்டரிகள் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.