விபசாரத்தில் ஈடுபட்ட 2 பெண்கள், புரோக்கர் கைது
திருச்செங்கோடு, நவ.11: திருச்செங்ேகாடு அருகே, விபசாரத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் மற்றும் புரோக்கரை போலீசார் கைது செய்தனர்.திருச்செங்கோடு புறநகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கருமகவுண்டம்பாளையம், அம்மையப்பா நகர் பகுதியில் வீடு எடுத்து, பாலியல் தொழில் செய்து வருவதாக திருச்செங்கோடு நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அங்கு 2 பெண்கள், ஒரு ஆண் விபசார தொழில் செய்து வந்ததும், புரோக்கர்களாக செயல்பட்டு வந்தது தெரிய வந்தது.இதன் பேரில், கூட்டப்பள்ளியை சேர்ந்த சுகன்யா (38), கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஷீலா தனலட்சுமி (49), ராசிபுரத்தை சேர்ந்த ஜெயக்குமார் (40) ஆகியோரை புறநகர் போலீசார் கைது செய்து குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கைது செய்யப்பட்ட மூன்று பேரையும், குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதிரங்கராஜன் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட மூவரும், சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.