ஒன்றிய அரசை கண்டித்து ஓய்வூதியர்கள் மனிதச்சங்கிலி
மதுரை, ஜூலை 26: மதுரை காந்தி மியூசியம் அருகே, ஒன்றிய, மாநில ஓய்வூதியர் மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நேற்று மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்டத் தலைவர் பிச்சைராஜன் தலைமை வகித்தார். செயலாளர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய அரசு 1972ல் நிறைவேற்றிய பென்சன் விதிகளில் திருத்தம் செய்துள்ளது. இது ஓய்வூதியதார்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடப்பதாக அவர்கள் கூறினர். ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்களையும் எழுப்பினர்.