போதைப்பொருள் வழக்குகளில் பறிமுதலான வாகனங்கள் ஏலம்: நாளை முதல் பார்வையிடலாம்
மதுரை, டிச. 6: மதுரையில் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு ேபாலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் டிச.22 மற்றும் டிச.23ல் ஏலம் விடப்படுகிறது. இந்த வாகனங்களை நுண்ணறிவு பிரிவு அலுவலகத்தில் பொதுமக்கள் நாளை (டிச.7) முதல் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள போதை பொருள் நுண்ணறிவு பிரிவு (என்ஐபி) அலுவலகங்களில் போதை பொருள்...
உழவர் சந்தையில் வேளாண் அதிகாரி ஆய்வு
மதுரை, டிச. 6: மதுரை, சின்ன சொக்கிக்குளம் உழவர் சந்தையில், வேளாண் வணிகப்பிரிவின் துணை இயக்குநர் ஆய்வு மேற்கொண்டார். மதுரை, சின்ன சொக்கிகுளத்தில் அமைந்துள்ள உழவர் சந்தையில், வேளாண் வணிக துணை இயக்குநர் மெர்சி ஜெயராணி ஆய்வு மேற்கொண்டார். தற்போது பருவ மழைக்காலம் என்பதால் மழை நீர் தேங்காமல் இருக்க உழவர் சந்தையில் பேவர்...
டிரைவரை தாக்கிய 5 பேர் கைது
மதுரை, டிச. 5: மதுரை நியூ மீனாட்சி நகரை சேர்ந்தவர் சையதுஅலி(26). இவர் கொடைக்கானல் செல்வதற்காக கீழசந்தைப்பேட்டை பிஷர் ரோட்டு வழியாக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது 2 பைக்குகளில் வந்த 5 வாலிபர்கள், சையது அலி ஓட்டிய காரை வழிமறித்து நிறுத்தினர். பின்னர் அவரிடம் தகராறு செய்து காரை சேதப்படுத்தினர். இதை செல்போனில்...
மதுரையில் டிச.7ல் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்: அமைச்சர் பி.மூர்த்தி நம்பிக்கை
மதுரை, டிச. 5: மதுரையில் டிச.7ம் தேதி நடைபெற உள்ள மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, தமிழ்நாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த விழாவாக அமையும் என, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார். மதுரை ஆலாத்தூரில், வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் எம்.ஆர்.எம்.பாலசுப்ரமணியம் தலைமையில் நேற்று நடைபெற்றது....
சிறுதானிய உற்பத்தி வழிமுறை
மதுரை, டிச. 5: வறண்ட மற்றும் மானாவாரி பகுதிகளில் தண்ணீர் தேவை குறைந்த சிறுதானியங்களை பயிரிடலாம். தரிசு நிலங்கள் மற்றும் மீளமைக்கப்பட்ட நிலங்களில் பயிர் சுழற்சி முறையில் இவற்றை சாகுபடி செய்ய வேண்டும். தமிழகத்தில் சிறுதானியங்கள் சாகுபடி பரப்பளவை, உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்ட. ஆகவே சான்று பெற்ற விதைகளை, அரசு மற்றும் அரசு சார்ந்த...
மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
மதுரை, டிச. 4: மதுரையில் உள்ள கலெக்டர் அலுவலகம் அருகே, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாற்றுத் திறனாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அரசாணை 24 ஐ உடனடியாக ரத்து செய்து, அரசாணை எண் 20ல் குறிப்பிட்டுள்ளபடி சிறப்பு ஆட்சேர்ப்பு நடத்தக் கோரி பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம், தமிழ்நாடு...
மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்
மதுரை, டிச. 4: மதுரை, பவர்ஹவுஸ் சுப்பிரமணியபுரம் வளாகத்தில் மதுரை தெற்கு கோட்ட மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகம் நீண்ட காலமாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக அலுவலகம் இன்று (டிச.4) முதல் மதுரை மீனாட்சியம்மன் கோவில் வாகன காப்பகம் அருகில் அமைந்துள்ள கோவில் துணை மின்நிலைய வளாகத்திற்கு மாற்றப்படுகிறது. இதனையடுத்து அலுவலக பணிகள்...
எலெக்ட்ரீசியன் தற்கொலை
அலங்காநல்லூர், டிச. 4: அலங்காநல்லூர்அருகே உள்ள வலசை கிராமத்தை சேர்ந்தவர் விஜய் பிரபாகரன் (26). எலெக்ட்ரீசியனாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி வினோதா. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்னை காரணமாக மன வேதனை அடைந்த அவர், நேற்று மாலை தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த...
டிச.7ல் கொடிநாள் தேநீர் விருந்து
மதுரை, டிச. 3: படைவீரர் கொடிநாளை முன்னிட்டு வரும் 7ம் தேதி கொடிநாள் உண்டியல் வசூலை கலெக்டர் பிரவீன்குமார் துவக்கி வைக்கிறார். பின்னர் 11 மணியளவில் கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிட தரைத்தள கூட்ட அரங்கில் நடைபெறவுள்ள கொடிநாள் தேநீர் விருந்து நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு தேநீர் விருந்து அளித்து...