கள்ளிக்குடி ரயில் நிலையத்தின் பிளாட்பார பணிகளில் தொய்வு துரிதப்படுத்த பயணிகள் கோரிக்கை
திருமங்கலம், ஜூலை 28: கள்ளிக்குடி ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பிளாட்பார பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை - நெல்லை ரயில்வே வழித்தடத்தில் முக்கிய ஸ்டேஷனாக கள்ளிக்குடி அமைந்துள்ளது. மதுரை - செங்கோட்டை, மயிலாடுதுறை - செங்கோட்டை, தூத்துக்குடி - பெங்களூரு எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல்வேறு ரயில்கள் இந்த ஸ்டேசனில் நின்று செல்கின்றன. கள்ளிக்குடி. டி.கல்லுப்பட்டி, பேரையூர், சிவரக்கோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பயணிகள் பயன்படுத்தும் இந்த ஸ்டேசனில் இரண்டு பிளாட்பாரங்கள் உள்ளன. தற்போது இங்கு முதலாவது பிளாட்பாரத்தினை விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே இரண்டாம் பிளாட்பாரம் விரிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில், முதலாவது பிளாட்பாரத்தில் விரிவுபடுத்தும் பணிகள் தொடங்கியது. ஆனால் இந்த பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. மதுரை மார்க்கத்தில் செல்லும் ரயில்கள் அனைத்தும் முதலாவது பிளாட்பாரத்தில் நின்று செல்லும். தற்போது விரிவாக்க பணிகளால் இந்த பிளாட்பாரம் மணல் குவி மதுரை, வண்டியூர் மாரிம்மன் கோயிலுக்கு புதுமண்டபம் பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் நேற்று பால்குடம் சுமந்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக வந்தனர்.