சாலைப்பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மதுரை, ஜூலை 30: சாலைப்பணியாளர் சங்கத்தினர் தீப்பந்தம் ஏந்தி தர்ணா ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் மற்றும் கட்டுமான பராமரிப்பு அலுவலகம் முன் நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில் கையில் தீப்பந்தம் ஏந்தி தர்ணா ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு படி பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும்.
பணியின் போது உயிரிழந்தவர்களின் வாரிசு தாரர்களுக்கு கருணை அடைப்படையில் பணி நியமனம் வழங்கிட வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைத்திட வேண்டும். மேலும் தனியார்மயப்படுத்துதலை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.