பள்ளி மாணவர்களுக்கு திறன் பயிற்சி
Advertisement
மதுரை, ஆக. 2: மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்களின் கல்வித் திறன்களை மதிப்பீடு செய்யும் ஸ்டேட் லெவல் அச்சீவ்மென்ட் சர்வே 2025 அறிவிப்பின்படி மாநில அளவில் மூன்றாவது இடத்தை மதுரை மாவட்டம் பெற்றுள்ளது. மாநிலத்தின் சராசரி மதிப்பெண்களைவிட, மதுரை மாவட்டம் அனைத்து தரப்புகளிலும் மேலாக செயல்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் நோக்கில் 4 நடுநிலை, 2 உயர்நிலை, 4 மேல்நிலைப் பள்ளிகளில், மாணவர்களின் அடிப்படை வாசிப்பு, எழுதும் திறன்கள், விரிவான வாசிப்பு மற்றும் புரிதல் திறன் மேம்பாட்டிற்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.
Advertisement