திருமங்கலம் அருகே 70க்கு பாலியல் சீண்டல் 50 வயது விவசாயி கைது
திருமங்கலம், ஆக 1: திருமங்கலம் அருகே தும்மகுண்டுவை அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 70 வயது மூதாட்டி. கணவர் இறந்துவிட்டார். குழந்தைகள் இல்லை. இதன்காரணமாக ஊரில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் நேற்று முன்தினம் கூலி வேலை பார்த்துக் கொண்டிருந்தார். இந்த தோட்டத்தின் அருகே உசிலம்பட்டியை சேர்ந்த பால்ராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தை சிந்துபட்டியை சேர்ந்த முத்துவீரன்(50) ஒத்திக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.
விவசாய வேலையில் இருந்த மூதாட்டி அப்பகுதியிலேயே மதிய உணவு சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது குடிபோதையில் வந்த முத்துவீரன், மூதாட்டியிடம் பாலியல்ரீதியாக அத்துமீற முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கூச்சல் போடவே, முத்துவீரன் தப்பியோடினார். இதுகுறித்த புகாரின்பேரில் சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, முத்துவீரனை கைது செய்தனர்.