மேலூர் சாலையில் ஆபத்தான வளைவு
மதுரை, ஜூலை 28: மதுரையை அடுத்த கள்ளந்திரி முதல் மேலூர் வரையிலான 16 கி.மீ தூர சாலையில் கிடாரிபட்டி, அ.வல்லாளபட்டி உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன. இச்சாலையில் கிடாரிபட்டியிலிருந்து அ.வல்லாளபட்டி செல்லும் முன்புள்ள ஆபத்தான வளைவு மற்றும் போதிய மின்விளக்குகள் இல்லாமல் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இதனால் இரவு நேரங்களில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்துக்கள் நடக்கின்றன. எனவே இதனை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை முன்வர வேண்டும். அதேபோல் அங்கு, மின்விளக்குகள் பொருத்த சம்பந்தப்பட்ட துறையினர் முன்வர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.