அப்துல்கலாம் நினைவு தினம்
மதுரை, ஜூலை 26: முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே.அப்துல் கலாமின் 10ம் ஆண்டு நினைவு நாள் நாளை (ஜூலை 27) நாடு முழுதும் அனுசரிக்கப்பட உள்ளது. இதையொட்டி மதுரையில் உள்ள தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நேற்று மாணவர்கள் அவரது பெயர் வடிவில் பத்து நிமிடங்கள் பத்து வினாடிகள் ஒன்றிணைந்து நின்றிருந்தனர். பின்னர் அவர்கள் கலாமின் பொன்மொழிகளை எடுத்துரைத்தனர். மாணவர்கள் அனைவருக்கும், பள்ளி நிர்வாகம் சார்பில் சான்றிதழ்கள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.