கருங்கற்கள் கடத்திய டிராக்டர் பறிமுதல்
கிருஷ்ணகிரி, ஜூலை 24: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகேயுள்ள நல்லகானகொத்தப்பள்ளி விஏஓ கோவிந்தராஜ் மற்றும் அதிகாரிகள், அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே ரோந்து சென்றனர். அப்போது கேட்பாரற்று நின்ற டிராக்டரில் சோதனை செய்தனர். அதில், ரூ.2500 மதிப்பிலான ஒரு யூனிட் கருங்கற்கள் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதயைடுத்து டிராக்டரை பறிமுதல் செய்து, சூளகிரி போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து, டிராக்டர் உரிமையாளர் மற்றும் டிரைவர் பற்றி விசாரித்து வருகின்றனர்.