ஓசூரில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க நடவடிக்கை
ஓசூர், அக்.12: ஓசூரில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஓசூரில் தி சிட்டிசன் டெவெலப்மென்ட் சர்வீஸ் சொசைட்டி அமைப்பின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ மனோகரன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் சத்யமூர்த்தி, பொதுச்செயலாளர் சுபாஷ், பொருளாளர் குருமூர்த்தி, நிர்வாகிகள் கிருஷ்ணன், அபூபக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்....
கனமழையால் தொட்டள்ளா ஆற்றில் வெள்ளப்பெருக்கு
தேன்கனிக்கோட்டை, அக்.12: அஞ்செட்டி வனப்பகுதியில் கனமழையால் நான்கு ஆண்டுகளுக்கு பின்பு தொட்டள்ளா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, தளி, அஞ்செட்டி, கெலமங்கலம் பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழைக்கு அஞ்செட்டி சுற்றியுள்ள ஏரி, குளங்கள்...
அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்
போச்சம்பள்ளி, அக்.10: மத்தூர் வடக்கு ஒன்றிய அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் எம்.மோட்டூரில் நடந்தது. ஊத்தங்கரை எம்எல்ஏ தமிழ்செல்வன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் சக்கரவர்த்தி, நரேஷ்குமார் முன்னிலை வகித்தனர். துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ கலந்து கொண்டு, வாக்காளர்களை பட்டியலில் சேர்ப்பது குறித்தும், வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சி அமைய,...
பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா
காவேரிப்பட்டணம், அக்.10: காவேரிப்பட்டணம் அருகே பையூர் ஊராட்சி கந்தலம்பட்டி, ஊத்துபள்ளம் பொதுமக்கள் நீண்ட நாட்களாக புதிய ரேஷன் கடை வேண்டி கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில், கந்தலம்பட்டி கிராமத்தில் புதிய பகுதி நேர ரேஷன் கடையை, கிருஷ்ணகிரி எம்எல்ஏ அசோக்குமார் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தை தொடங்கி வைத்தார். ஒன்றிய செயலாளர் பையூர்...
திமுக பூத் கமிட்டி கலந்தாய்வு கூட்டம்
காவேரிப்பட்டணம், அக்.10: காவேரிப்பட்டணத்தில், பேரூர் திமுக சார்பில் பூத் கமிட்டி ஒருங்கினைப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம், நகர பொருப்பாளர் ஜேகேஎஸ் சாஜீத் தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சட்டமன்ற தேர்தல் பார்வையாளர் வழக்கறிஞர் தேவகுமார் பேசுகையில், 2026ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், திமுக வாக்கு சாவடி முகவர்கள் பணியாற்றுவது குறித்து ஆலோசனை வழங்கினார். நிகழ்ச்சியில்...
தேங்கும் கழிவுநீரால் தொற்று பரவும் அபாயம்
ராயக்கோட்டை, அக்.9: ராயக்கோட்டை அரசு மருத்துவமனை அருகே ஓட்டல்கள், டீ கடைகள், பூ மார்க்கெட் போன்றவை உள்ளன. அவற்றை தாண்டி தக்காளி மண்டிகள் உள்ளன. அதோடு ரயில் நிலையமும் மருத்துவமனை எதிரில் அமைந்துள்ளது. இந்த வழியாகத்தான் ஓசூர் மற்றும் பெங்களூருவுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. இந்த சாலையில் வேகத்தடை இருப்பதால்,...
டூவீலரில் கஞ்சா கடத்தியவர் கைது
ஓசூர், அக். 9: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் ஷர்மிளா பானு மற்றும் போலீசார், ஜூஜூவாடி சோதனை சாவடி பகுதியில் நேற்று முன்தினம் இரவு, வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக டூவீலரில் சந்தேகப்படும்படி வந்த வாலிபரிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில்...
பயணிகளை அழைத்து சென்ற 9 டூவீலர்கள் பறிமுதல்
ஓசூர், அக்.9: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ராபிடோ செயலி மூலம், பயணிகளை தங்களுடைய சொந்த டூவீலர்களில் அழைத்து செல்வதாக தகவல் வந்தது. இதையடுத்து, ஆட்டோ டிரைவர்கள் 9 டூவீலர்களை பறிமுதல் செய்து, ஓசூர் டவுன் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணைக்கு பின், 9 டூவீலர்களும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. போக்குவரத்து...
பாகலூர் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
ஓசூர், அக். 8: ஓசூர்-பாகலூர் சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பாகலூர் சாலையில் கிருஷ்ணர் கோயில், 20 அடி பிரமாண்ட ஆஞ்சநேயர் அமைந்துள்ளது. இந்த சாலையில், கழிவு நீர் கால்வாய் சரிவர இல்லாததால், மழை நீருடன் கழிவு நீர் கலந்து கோயில் முன்பு ஆறாக ஓடுகிறது....