விபத்துகளை தடுக்க வேகத்தடை அவசியம்
போச்சம்பள்ளி, ஜூலை 28: போச்சம்பள்ளி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கௌதம் மற்றும் பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் நேதாஜியிடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:
போச்சம்பள்ளியில் போதிய சாலை கட்டமைப்புகள் இன்றி காணப்பட்டது. இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, போச்சம்பள்ளியில் இருந்து சிப்காட் வரை சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமமின்றி சென்று வருகின்றனர். இந்நிலையில், சில வாகனங்கள் ஒட்டிகள் மின்னல் வேகத்தில் செல்வதால் சிறு சிறு விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.
சிப்காட் செல்லும் சாலையில் அரசு பள்ளி, மருத்துவமனை, நூலகத்திற்கு செல்ல மக்கள் அதிகம் சென்று வருகின்றனர். அப்போது சாலையை கடக்க நேரம் ஆவதாலும், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதனை தவிர்க்க நெடுஞ்சாலைத்துறையினர் சிப்காட் செல்லும் வழியில் உள்ள போச்சம்பள்ளி வருவாய் அலுவலம் முன் வேகத்தடை அமைக்க வேண்டும். மேலும், சீரான போக்குவரத்திற்கு வசதியாக சாலை நடுவே வெள்ளை கோடுகள் மற்றும் பிளாஸ்ட் பதிக்க வேண்டும்,’ என்றனர்.