18 கிலோ குட்கா கடத்திய முதியவர் கைது
கிருஷ்ணகிரி, ஜூலை 31: கிருஷ்ணகிரி டவுன் எஸ்எஸ்ஐ வெங்கடேசன் மற்றும் போலீசார் புதிய பஸ் நிலையம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த நபரிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் குட்கா பொருட்கள் வைத்திருப்பது தெரிந்தது. தொடர் விசாரணையில், அவர் மதுரை பேரையூர் அருகேயுள்ள சோளாபுரம் பகுதியை சேர்ந்த கருப்பையா (50) என்பதும், பெங்களூரில் இருந்து மதுரைக்கு குட்கா பொருட்களை கடத்தி செல்ல முயன்றதும் தெரிந்தது. இதையடுத்து அவரிடமிருந்து 9600 ரூபாய் மதிப்பிலான 18 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.