துர்க்கை மாரியம்மன் கோயிலில் தீ மிதி விழா
ராயக்கோட்டை, ஆக.2: ராயக்கோட்டை துர்க்கை மாரியம்மன் கோயிலில் தீ மிதி விழா நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் உள்ள துர்க்கை மாரியம்மன் கோயில் விழா ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்த வருடமும் விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த 30ம் தேதி கங்கனம் கட்டுதலும், சக்தி அழைப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து 31ம் தேதி மழை வேண்டி சிறப்பு பூஜை செய்தனர். நேற்று காலை வஜ்ரநாதேஸ்வரர் கோயிலில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து தீ குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்கள் தீ மிதித்து வேண்டுதல் நிறைவேற்றினர். அன்னதானம் வழங்கப்பட்டது.