மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்
போச்சம்பள்ளி, ஆக. 1: காவேரிப்பட்டணம் ஒன்றியம், சுண்டகாப்பட்டி கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக காலை கணபதி பூஜையுடன் யாக பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து பூஜிக்கப்பட்ட கலசங்களை மேளதாளங்கள் முழங்க எடுத்துச்சென்று, வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்களுக்கு புனித நீரை ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. விழாவை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். கோயிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.