கஞ்சா பதுக்கி விற்ற 2 வாலிபர்கள் கைது
கிருஷ்ணகிரி, அக்.26: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி எஸ்ஐ அசோக்குமார் மற்றும் போலீசார், சூளகிரி பேருந்து நிலைய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றிக் கொண்டிருந்த 2 வாலிபர்களிடம், விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் அருகில் உள்ள பீரேபாளையம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்(23), சூளகிரி காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜா(24) என்பதும், கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் தெரிய வந்தது. உடனே, அவர்களை கைது செய்த போலீசார், ரூ.3 ஆயிரம் மதிப்பிலான 60 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர்.
Advertisement
Advertisement