தீக்குளிக்க முயன்ற விவசாயியால் பரபரப்பு
போச்சம்பள்ளி, ஜூலை 28: மத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரமகவுண்டனூர் கிராமத்தில், 7 ஆண்டுக்கு முன் ரேஷன் கடை இருந்தது. இக்கடை சிதிலமடைந்ததால், அதை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இடித்து அப்புறப்படுத்தினர். மீண்டும் அதே இடத்தில், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில், புதியதாக ரேஷன் கடை கட்டிடம் கட்டும் பணி, நேற்று முன்தினம் தொடங்கியது. அப்போது, அப்பகுதியை சேர்ந்த விவசாயி வேடியப்பன் உள்ளிட்ட சிலர் இந்த இடம் பட்டா நிலம். எனவே, ரேஷன் கடை கட்டக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்றார். இதையறிந்து, போச்சம்பள்ளி தாசில்தார் சத்யா, பிடிஓ செல்லகண்ணாள், இன்ஸ்பெக்டர் பத்மாவதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.