கஞ்சா வைத்திருந்த முதியவர் கைது
ஓசூர், ஜூலை 25: கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை போலீசார், தீர்த்தம் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி வந்த முதியவரிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். அவரை சோதனை செய்தபோது 100 கிராம் கஞ்சா வைத்திருந்தார். விசாரணையில் அவர் பேரிகை பகுதியை சேர்ந்த வெங்கைய்யா (65) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் ஓசூர் சிப்காட் போலீசார் சின்னஎலசகிரி பேருந்து நிறுத்தம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது டூவீலரில் வந்த நபர் போலீசாரை பார்த்ததும் வண்டியை அங்கேயே போட்டு விட்டு ஓட்டம் பிடித்தார். அந்த டூவீலரை கைப்பற்றி சோதனையிட்டபோது 50 கிராம் கஞ்சா இருந்தது. விசாரணையில் தப்பிய வாலிபர் சின்னஎலசகிரியை சேர்ந்த சந்திரசேகர் (25) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.