மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்பட கரூரில் 179 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
கரூர், ஜூலை 24: கரூர் மாநகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மாவட்ட கழகச்செயலாளர் வி.செந்தில் பாலாஜி மனுக்களை பெற்றுக்கொண்டு உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். மக்களின் குறைகளை வீட்டிற்கே வந்து கேட்டறிந்து தீர்வு காணும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் கரூர் மாநகராட்சி, மண்டலம்-4, வார்டு -37 பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் தான்தோன்றிமலை ரெட்டியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், ஆணையர் கே.எம்.சுதா, மாவட்ட வருவாய் அதிகாரி கண்ணன் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கரூர் மாவட்ட கழக செயலாளர் வி செந்தில் பாலாஜி எம்எல்ஏ,பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கரூர் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்ததாவது,
தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் குறைகளை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே அரசுத் துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் வந்து கேட்டறிந்து தீர்வுகாண தமிழ்நாடு முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் 10,000 முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளது. திராவிட மாடல் ஆட்சியில் மக்களின் தேவைகளை அறிந்து, அதனை பூர்த்தி செய்யும் வகையில் கோரிக்கைகளை நிறைவேற்றும் மக்களின் அரசாக செயல்பட்டு வருகிறது.
கரூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டமானது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் 179 இடங்களில் செப்டம்பர் மாதம் வரை நடைபெற உள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஊரகப்பகுதிகளில் 101 முகாம்களும், நகர்புற பகுதிகளில் 78 முகாம்கள் நடத்தப்படுகிறது. இந்த முகாம்கள் மூலம் நகர்புற பகுதிகளில் 13 அரசுத்துறைகளைச் சேர்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 அரசுத்துறைகளைச் சேர்ந்த 46 சேவைகளும் வழங்கப்படவுள்ளது.
இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைப்பெற தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருந்தால் முகாமில் தங்கள் விண்ணப்பம் அளிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் வழங்கப்படும். இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், இத்திட்டத்தில் 519 தன்னார்வலர்கள், வீடு வீடாக சென்று முகாம்கள் நடைபெறும் இடங்கள், துறைகள். உத்தரவுகள் மற்றும் வேண்டிய ஆவணங்கள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்படுகின்றன. ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டமானது கரூர் மாவட்டத்தில் 48 வார்டுகளில் 32 இடங்களில் நடைபெறுகிறது. மற்ற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு தீர்வுகாணலாம். இன்று முகாமிற்கு வர இயலாதவர்கள் அடுத்த முகாமில் கலந்து கொள்ளலாம்.வழங்கும் பொதுமக்கள் ஆவணங்களோடு இணைத்து வழங்கவேண்டும்.என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கரூர் வருவாய் கோட்டாட்சியர் முகமது பைசல், தலைவர்கள் எஸ்.பி.கனகராஜ் வெங்கமேடு சக்திவேல், கா.அன்பரசன், ஆர்.எஸ்.ராஜா, பகுதி கழகப்பொறுப்பாளர்கள் வக்கீல் சுப்பிரமணியன், ஜோதிபாசு, வி.ஜி.எஸ். குமார், கரூர் வடக்கு நகர பொறுப்பாளர் வெங்கமேடு பாண்டியன், மாவட்ட மேலாளர் தாட்கோ முருகவேல், மாவட்ட கழக துணைச்செயலாளர் ரமேஷ் பாபு, மகேஸ்வரி தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சாலை சுப்பிரமணியன், காலனி செந்தில்,மாநகர பொருளாளர் அங்குபசுபதி, காந்திகிராமம் வடிவேல், டிஜிட்டல் சம்பத்குமார், மாமன்ற உறுப்பினர்கள் வேலுச்சாமி, மோகன்ராஜ் பழனிச்சாமி கார்த்திக்குமார், செயலாளர்கள், தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.