க.பரமத்தி பகுதியில் பாரத ஸ்டேட் வங்கி அமைக்க கோரிக்கை
க.பரமத்தி, ஜூலை 11: க.பரமத்தி பகுதியில் அரசு பணியாளர்கள், ஓய்வூதியதாரர்கள், முதியோர் உதவித்தொகை பெறுவோருக்காக பாரத ஸ்டேட் வங்கி அமைக்க வங்கி துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர் மாவட்டம், க.பரமத்தி கரூர்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இப்பகுதியில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஒன்றிய அலுவலகம், இரண்டு இன்ஜினியரிங் கல்லூரிகள் தொழில் நிறுனவங்கள், கிரஷர்கள், உதவி தொடக்க கல்வி அலுவலம் மற்றும் பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.