கரூர் திமுக சார்பில் புறா போட்டிகள்
கரூர், ஜூலை. 26: கரூர் மாவட்ட திமுக சார்பில் புறா போட்டிகள் நேற்று துவங்கியது. கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நேற்று காலை துவங்கிய இந்த சாதா புறா போட்டிகளை மாநகராட்சி துணை மேயர் சரவணன், 36வது வார்டு உறுப்பினர் வசுமதி பிரபு ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். இந்த நிகழ்வில், திமுக நிர்வாகி பிரபு, 36வது வட்ட செயலாளர் செல்வராஜ், ராமன் உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
இரட்டை புறா, சாதா புறா என இரண்டு பிரிவுகளில் ஜூலை 25ம்தேதி முதல் 27ம்தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த போட்டிகளில் முதல் பரிசு பெறும் புறாவின் உரிமையாளருக்கு ரூ.20 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.15 ஆயிரம், மூன்றாம் பரிசு ரு.10 ஆயிரம், நான்காம் பரிசு ரூ. 5 ஆயிரம் வழங்கப்படவுள்ளது. தொடர்ந்து பறக்கும் புறாக்களை கணக்கெடுத்து, நீண்ட தூரம் பறக்கும் புறாவை அடையாளம் கண்டு புறாக்களின் உரிமையாளர்களுக்கு பரிசளிப்பு நாளன்று பரிசுகள் வழங்கப்படவுள்ளன. இந்த புறாப் போட்டிகள் மூன்று பகுதிகளில் நடைபெறுகிறது.