கோவை கங்கா மருத்துவமனை சார்பில் மருத்துவ முகாம்
கரூர், ஜூலை 25: கரூர் ரவுண்ட் டேபிள் 138- கோவை கங்கா மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவமுகாம் 2 நாட்கள் நடக்கிறது. கரூர் ரவுண்ட் டேபிள் 138 கோவை கங்கா மருத்துவமனை இணைந்து இலவச மருத்துவ முகாம் 3 ஆண்டுகளாக தொடர்ந்து கரூர் பகுதியில் பொதுமக்கள் பயன்பெறும் விதமாக மருத்துவ முகாம் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக இலவச மார்பக புற்றுநோய் பரிசோதனை, சர்க்கரை நோயாளிகளுக்கு ஆறாத புண் ஏற்பட்டால் அதற்கு மாற்றுச்சிகிச்சை, அன்னப்பிளவு, தீக்காயத்தால் ஏற்பட்ட தழும்புகளுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் பரிசோதனைக்கு பின் இலவசமாக சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
இலவச மருத்துவ முகாம் ( நாளை சனிக்கிழமை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை) ஜூலை 26, 27 ஆகிய நாட்கள் காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை கரூர் பஸ் நிலையம் அருகில் உள்ள சரஸ்வதி வெங்கட்ராமன் மஹால் நடைபெறுகிறது. இந்த முகாமினை பயன்படுத்திக் கொள்ளுமாறு ரவுண்ட் டேபிள் நிர்வாகம் மற்றும் கோவை கங்கா மருத்துவமனை நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.