குளித்தலை அருகே நடுநிலைப் பள்ளியில் மேலாண்மைக்குழு கூட்டம்
குளித்தலை, ஜூலை 26:கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த ஆதி நத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி மேலாண்மை குழுதலைவர் பிரியா தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மைக்குழு கல்வியாளரும், வார்டு உறுப்பினருமான மகேந்திர ராஜ், ஆதிநத்தம் வார்டு உறுப்பினர் தீபா, பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் சகுந்தலா முன்னிலை வகித்தனர்.
முன்னதாக பள்ளி தலைமை ஆசிரிய.கீதா வரவேற்றார். இதில் பள்ளி மேலாண்மைக்குழு செயல்பாடுகள் குறித்து எடுத்துக் கூறினார். பள்ளியின் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ஜெய்குமார், பள்ளி மேலாண்மை குழுக்கூட்டப் பொருள் குறித்து விரிவாக எடுத்துக் கூறினார். பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் அனைவரும் பள்ளி வளாக தூய்மையையும், ஹைடெக் லேப், சத்துணவு தோட்டம், புதிய வகுப்பறை கட்டிடம், குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதிகளை பார்வையிட்டனர்.