வெள்ளியணை அருகே தனியார் பஞ்சுமில்லில் திடீர் தீ
கரூர், ஜூலை 30: கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகேயுள்ள செயல்பட்டு வரும் தனியார் பஞ்சு மில்லில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கரூர் மாவட்டம் வெள்ளியணை அடுத்துள்ள வால்காட்டு புது£ரில் தனியாருக்கு சொந்தமான பஞ்சு உற்பத்தி மில் செயல்படுகிறது. இந்த மில்லில் 10க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
வழக்கம் போல் நேற்று காலை பணியாளர்கள் பஞ்சு மில்லில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ஒரு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக காற்றில் தீ பரவி விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த கரூர் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்து சம்பவம் மற்றும் சேத மதிப்பு குறித்து வெள்ளியணை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரிக்கின்றனர்.