வாங்கல், குப்புச்சிபாளை பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று நடக்கிறது
கரூர், ஜூலை 30: உங்களுடன் ஸ்டாலின் முகாம் வாங்கல், குப்புச்சிபாளையம் ஊராட்சிகளில் இன்று நடக்க இருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் வட்டாரத்தில், வாங்கல், குப்புச்சிபாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு வாங்கலம்மன் திருமண மண்டபத்திலும்,
தாந்தோணி வட்டாரத்தில், ஆண்டாங்கோயில் கிழக்கு ஊராட்சிக்கு ஆண்டாங்கோவில் புதுார் PSR திருமண மண்டபத்திலும், திருக்காட்டுத்துறை ஊராட்சிக்கு இளங்கோ நகர் திருமலை மஹாலிலும், உங்களுடன் ஸ்டாலின் இன்று சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் தங்களது பகுதிக்கு ஒதுக்கப்பட்ட நாட்களில் மேற்குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் தங்களது கோரிக்கை தொடர்பாக மனு செய்து பயன்பெறுமாறு கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கேட்டுக்கொள்கிறார்.