புகழூர் நகராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம்
வேலாயுதம்பாளையம். ஜூலை. 30: கரூர் மாவட்டம் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் புகழூர் நகராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் வாங்கல் சுகாதாரத்துறை நடமாடும் மருத்துவக் குழு மருத்துவர் டாக்டர் இலக்கியா தலைமையில் சுகாதார செவிலியர்கள், சுகாதாரத் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். மருத்துவமுகாமிற்கு வந்திருந்த முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள், பொதுமக்கலுக்கு ரத்தப் பரிசோதனை, ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்தத்தில் ரத்த அழுத்த பரிசோதனை செய்தனர்.
மேலும் அவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, இருமல், தொண்டைவலி, கால்வலி, உடல் வலி உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்தனர். அதைத்தொடர்ந்து மக்களுக்கு உரிய மருந்து, மாத்திரைகளை வழங்கினர். அப்போது பொதுமக்கள் அதிகளவு காய்கறிகளையும், கீரை வகைகளையும் பயன்படுத்த வேண்டும். மேலும் சத்தான உணவுகளை சாப்பிட்டு நோய் எதிர்ப்பு சக்தி கூட நல்ல பழங்கள், உணவுகளை சாப்பிட வேண்டும் என தெரிவித்தனர்