கரூரில் பெய்த தொடர் மழையால் ரயில்வே பாலத்தில் தேங்கியுள்ள தண்ணீர் அகற்ற வேண்டும்: வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
கரூர், நவ. 25: தொடர் மழையின் காரணமாக கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம் போல தேங்கியுள்ளது. இதனால், அனைத்து தரப்பினர்களும் கடும் அவதியில் உள்ளனர். கடந்த மூன்று நாட்களாக காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மாவட்டம் முழுதும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை பரவலாக மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக பாலம்மாள்புரம் செல்லும் வழி, கரூர் ஈஸ்வரன் கோயில் வளாகம் போன்ற பல்வேறு பகுதிகளிலும், தாழ்வான இடங்களிலும் மழைநீர் குளம் போல தேங்கியுள்ளது.
இதன் காரணமாக இந்த பகுதியை கடந்து செல்லும் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, மழைநீர் தேங்கியுள்ள பகுதியை பார்வையிட்டு மழைநீர் தேங்காத வகையில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதிகளை பார்வையிட்டு தேவையான சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.