கரூர் அம்மன் நகரில் சாக்கடை வடிகால் அமைக்க வலியுறுத்தல்
கரூர், ஆக 1: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கொளந்தானூர் அம்மன் நகரில் சாக்கடை வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என இந்த பகுதியினர் எதிர்பார்ப்பில் உள்ளனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கொளந்தானு£ர் பகுதியில் இருந்து மருத்துவக் கல்லு£ரிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரம் அம்மன் நகர் உள்ளது. இந்த நகரில் நு£ற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன.
ஆனால், இந்த பகுதியில் முறையான சாக்கடை வடிகால் வசதி இல்லாத காரணத்தினால், கழிவுகள் சாலையில் சென்று பல்வேறு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, அம்மன் நகர் பகுதியில் சாக்கடை வடிகால் வசதி அமைத்து தர வேண்டும் என இந்த பகுதியினர் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு தேவையான பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கைவைத்துள்ளனர்.