கரூர், தாந்தோணி வட்டாரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
கரூர், ஆக. 1: கரூர் தாந்தோணி வட்டாரம் உள்ளிட்ட பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து கரூர் கலெக்டர் தங்கவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் என்ற புதிய திட்டம் கரூர் மாவட்டத்தில் ஜூலை 15-ம் தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சியில், வார்டு எண்.1,2,3,4,5,6,7,8 தளவாபாளையம் மலையம்மன் மண்டபத்திலும், தாந்தோணி வட்டாரத்தில், அப்பிப்பாளைம் மற்றும் தாளப்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு ஆட்டையாம்பரப்பு ஆராதனா மஹால், உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. மேலும், இச்சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் தங்களது பகுதிக்கு ஒதுக்கப்பட்ட நாட்களில் மேற்குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மக்கள் தங்களது கோரிக்கை தொடர்பாக மனு செய்து பயன்பெறலாமென கலெக்டர் தெரிவித்தார்.