கோதுமை வழங்காததால் ரேஷன்கடை ஊழியரிடம் தகராறு
வேலாயுதம்பாளையம், ஆக 1: கோதுமை வழங்காததால் ரேஷன்கடை ஊழியரிடம் தகராறு செய்த விவசாயியை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம் புகளூர் ரயில்வேகேட் அருகே புதுக்குறுக்குபாளையம் பகுதியை சேர்ந்தவர் வாசுகி (27). இவர், கரைப்பாளையத்தில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வாசுகி ரேசன் கடையில் இருந்த போது கரைப்பாளையம் பூலாங்காலனி பகுதியைச் சேர்ந்த பூபதி( 64 ).
விவசாயி. இந்நிலையில் கரைப்பாளையத்தில் உள்ள ரேஷன் கடைக்கு பூபதி சென்று வாசுகியிடம் 5 கிலோ கோதுமை கேட்டுள்ளார். அதற்கு கோதுமை இல்லை என்று வாசுகி கூறியுள்ளார் . இந்நிலையில் வாசுகி திருக்காடுதுறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அலுவலகப் பணி காரணமாக இருந்துள்ளார்.
அங்கு குடிபோதையில் சென்ற பூபதி ,வாசுகியை பார்த்து அலுவலகத்தில் இருந்து வெளியே வருமாறு தகாத வார்த்தைகளால் திட்டி நான் கோதுமை கேட்டால் கொடுக்க மறுக்கிறாய். உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளார். புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுபாஷினி, வழக்கு பதிவு செய்து பூபதியை கைது செய்து விசாரிக்கின்றனர்.