உங்களுடன் ஸ்டாலின் முகாம் கரூர், குளித்தலை பகுதியில் இன்று நடக்கிறது
Advertisement
கரூர், அக். 28: கரூர், குளித்தலை பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று நடக்கிறது.இது குறித்து கலெக்டர் தங்கவேல் கூறியிருப்பதாவது: உங்களுடன் ஸ்டாலின் முகாம் 28.10.2025 அன்று கரூர் மாநகராட்சியில் வார்டு எண் 21 மற்றும் 35 க்கு ஆசாத் ரோட்டில் உள்ள மாநகராட்சி கட்டிடத்திலும், குளித்தலை வட்டாரம் கே கே.பேட்டை மற்றும் வதியம் ஆகிய ஊராட்சிகளுக்கு கே.பேட்டை சமுதாயக்கூடத்திலும் ”உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.மேலும், இச்சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் தங்களது பகுதிக்கு ஒதுக்கப்பட்ட நாட்களில் மேற்குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் தங்களது கோரிக்கை தொடர்பாக மனு செய்து பயன்பெறலாம்
Advertisement