இன்று நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
கரூர், டிச.6: அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் இன்று நடைபெறுகிறது.
தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்கி அவர்களின் நலன் காப்பதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. அவ்வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் நலம்காக்கும் ஸ்டாலின் என்ற மருத்துவ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, முடநீக்கியியல், மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், இருதய சிகிச்சை, மூளை நரம்பியல், தோல் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், மனநல சிகிச்சை, பிசியோதெரபி, கதிரியக்கவியல் மற்றும் நுரையீரல் சிகிச்சையளிக்கப்படுகிறது. மேலும் ரத்த பரிசோதனை, இ.சி.ஜி, ஸ்கேன், எக்ஸ்ரே, எக்கோ, கர்ப்பப்பை வாய்புற்று நோய், மார்பக புற்றுநோய், நீரழிவு நோய் உள்ளிட்ட பரிசோதனைகளும் இலவசமாக அளிக்கப்படுகிறது. இம்முகாம் கடந்த ஆக்.2 ம் தேதி முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.