உலக நன்மைக்காக மதுரைவீரன் கோயிலில் சிறப்பு அபிஷேகம்
க.பரமத்தி, ஆக.4: க.பரமத்தி அருகே புன்னம் ஊராட்சி சடையம்பாளையம் காலனியில் மதுரைவீரன் கோயிலில் உலக நன்மைக்காகவும் ஊர் கிராம பொதுமக்கள் நன்மைக்காக வேண்டி நடைபெற்ற சிறப்பு அபிஷேக விழாவில் சுற்று பகுதியினர் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
க.பரமத்தி ஒன்றியம் புன்னம் ஊராட்சி சடையம்பாளையம் காலனி பகுதிகளில் மதுரைவீரன், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள், கருப்பண்ணசாமி, கன்னிமார்சுவாமி ஆகிய தெய்வங்களுக்கு முக்கிய விரத நாட்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் வழிபாடு நடைபெற்று வருகிறது. இந்த கோயிலில் உலக நன்மைக்காகவும் ஊர் கிராம பொதுமக்கள் நன்மைக்காக வேண்டி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.இதற்காக உள்ளூர், வெளியூர் பக்தர்கள் கோயிலை வந்தடைதல் நேற்று காலை காவிரி ஆற்றுக்கு சென்று புனித தீர்த்தம் கொண்டு வந்தனர். பிறகு சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை மற்றும் ஆராதனைகள் நடத்தப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து பெரும்பூஜை வழிபாடு நடத்தப்பட்டு பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டு மறுபூஜை செய்யப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் பக்தர்கள் செய்திருந்தனர்.