மார்த்தாண்டம் லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் பதவியேற்பு
திருவட்டார், ஜூலை 31: லயன்ஸ் கிளப் நிர்வாகிகளின் பதவியேற்பு விழா மார்த்தாண்டம் அருகே நடந்தது. விழாவிற்கு அமைப்பின் துணை தலைவர் டேனியல் பொன்னப்பன் தலைமை வகித்தார். மார்த்தாண்டம் காவல் நிலைய ஆய்வாளர் வேளாங்கண்ணி உதயரேகா மற்றும் மாவட்டத்தின் முதல் துணை ஆளுநர் வெற்றிச்செல்வன் ஆகியோர் புதிய நிர்வாகிகளை பதவிப்பிரமாணம் செய்து வைத்து, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினர். விழாவில் மண்டலத்தலைவர் ரெஜின், வட்டார தலைவர் எட்வின் துரை, ஒருங்கிணைப்பாளர் சம்போ ஜித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்யப்பட்டனர். தலைவராக பேராசிரியர் தேவகுமார் சாமுவேல், செயலாளராக ஹரிபிரசாத், பொருளாளராக சுரேஷ்குமார் ஆகியோருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. தொடர்ந்து ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவில் நிர்வாகிகள் ராஜன், டிபி தோமஸ், பிறேரா, தோமஸ், ஜோஸ், கிங் மெர்லின், ஷாஜி, கிருஷ்ணகுமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.