திருச்சூர் அருகே டீக்கடையில் வியாபாரியிடம் ரூ.75 லட்சம் பறிப்பு காரில் தப்பிய கும்பலுக்கு வலை
திருவனந்தபுரம், அக். 26: மலப்புரம் மாவட்டம் எடப்பாள் பகுதியைச் சேர்ந்தவர் முபாரக். வியாபாரியான இவர் கடந்த சில தினங்களுக்கு முன் பெங்களூரு சென்றிருந்தார். நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் இருந்து ஆம்னி பஸ்சில் புறப்பட்ட அவர் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் திருச்சூர் அருகே மண்ணுத்தி பகுதியில் பஸ்சில் இருந்து இறங்கினார். அவர் தன்னுடைய பேக்கில் ரூ.75 லட்சம் பணம் வைத்திருந்தார். பஸ்சிலிருந்து இறங்கிய பின் முபாரக் அங்குள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென காரில் வந்த 5 பேர் கொண்ட ஒரு கும்பல் அவரிடம் இருந்த பேக்கை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. இது குறித்து முபாரக் மண்ணுத்தி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement